“ட்விட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இருந்து விலகல்?” – எலான் மஸ்க் விடுத்த எச்சரிக்கை!
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறார்.அந்த வகையில், ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருவதை விமர்சித்த எலான்,கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து, பின்னர் அதை 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று கைப்பற்றி,அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.எனினும், ஒப்பந்தம் இன்னும் முடிவடையவில்லை.
இந்நிலையில்,ட்விட்டரை வாங்குவதற்கான தனது 44 பில்லியன் டாலர் ஏலத்தில் இருந்து விலகிக் கொள்ளவுள்ளதாக எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக,ட்விட்டர் நிறுவனத்திற்கு எலான் மஸ்க்கின் வழக்கறிஞர்கள் தரப்பில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:”ட்விட்டரில் உள்ள ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்த தகவல்களைத் தர நிறுவனம் மறுத்தால் ட்விட்டரை வாங்கும் முடிவில் இருந்து எலான் விலகி கொள்ளக்கூடும்.
மேலும்,ட்விட்டர் நிறுவனம் ஒப்பந்தந்தை மீறியதால் நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ள எலான் மஸ்க்கிற்கு அனைத்து உரிமைகளும் உண்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.