தளபதி விஜய்க்கு வில்லனாகும் விவேகம் பட நடிகர்..?
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. டார்க் ஆக்சன் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வைரலானது.
இந்த தகவலை தொடர்ந்து தற்போது இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க விவேக் ஓபராய்யிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் இதற்கு முன்பு தமிழில் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.