கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக இவர்தான் இருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதேபோல் முகேன் ராவ் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதனிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகேன் ராவ் அனைத்து டாஸ்க்குகளை சரியாக செய்தது மட்டுமல்லாமல், சக போட்டியாளர்களுடன் பாசத்துடன் பழகியது, பாடல் பாடி கலகலப்பாக வைத்திருந்தது போன்றவை அவருக்கு கூடுதல் ரசிகர்களை பெற்றுத்தந்தது.
மேலும், அவர் நிகழ்ச்சியில் அவர் பாடிய சத்தியமா நான் சொல்லுறேன்டி என்ற பாடல் மிகப் பெரிய ஹிட் அடித்தது. பிக்பாஸ்க்கு பிறகு அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் ரசிகர்கள் அவரை இந்த பாடலை பாடச் சொல்லி கேட்டு ரசித்தனர். இந்த நிலையில், முகேன் ராவின் தந்தை பிரகாஷ் ராவ் நேற்று மாலை 6 மணிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது. ரசிகர்கள் முகேன் ராவின் தந்தையின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…