நான் யாரையாச்சும் கஷ்டப்படுத்தியிருந்தா சாரி, ஆனால் மறுபடியும் அதை தான் செய்வேன்!
இன்று பாலாவின் பிறந்தநாள் எனவே பிக் பாஸ் வீட்டில் கேக் வெட்டிய பின் பேசிய பாலா, நான் யாரையாச்சும் கஷ்டப்படுத்தியிருந்தா சாரி, ஆனால் மறுபடியும் அதை தான் செய்வேன் எனவும் கூறியுள்ளார்.
இன்றுடன் 59 நாட்களாக ஒளிபரப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது 13 போட்டியாளர்கள் உள்ளே இருக்கிறார்கள். வழக்கமாக போட்டியாளர்களின் ஒருவருக்கு பிறந்தநாள் என்றாலும் கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம். அது போல இன்று பாலாஜிக்கு பிறந்தநாள். எனவே பிக் பாஸ் வீட்டில் கேக் வெட்டப்படுகிறது.
அனைவருக்கும் கேக் வெட்டி ஊட்டியபின் பாலாஜி பேசுகையில், நான் இந்த வீட்டிலுள்ள உங்கள் யாரையாவது கஷ்டப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள், ஆனால் மறுபடியும் அதை தான் செய்வேன் ஏனென்றால் இந்த விளையாட்டு அப்படி என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram