விண்டோஸ் 11: அட்டகாசமான 10 புதிய அம்சங்கள்..!
விண்டோஸ் 11 என்ற புதிய தலைமுறை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு விண்டோஸ் 11 என்ற புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கம்பியூட்டர் பயனர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பல சிறப்பம்சங்களோடு இது தயாரிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 இல் ஸ்டார்ட் மெனு இடது ஓரத்தில் இடம்பெற்றிருக்கும். தற்போது அறிமுகமாகியுள்ள விண்டோஸ் 11 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இந்த ஸ்டார்ட் மெனு திரையின் நடுப்பகுதியில் வைத்துள்ளனர். இதன் மூலம் எளிமையாக தேவையானவற்றை நாம் தேட முடியும். இந்த விண்டோஸ் 11 இல் இருக்கும் புதிய சிறப்பம்சங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.
- விண்டோஸ் 11 பல புதிய கவர்ச்சிகரமான தீம்களோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அப்டேட் செய்த பின்னர் ஒவ்வொரு வித்தியாச தீம் மற்றும் கிராபிக்ஸ் மாறுவதை காணமுடியும். விண்டோஸ் 11 ஸ்டார்ட் மெனு மையத்தில் இடம் பெற்றுள்ளது மேலும், டாஸ்க் பார் இடம் மாறி இருக்கிறது. ஐகான்கள் திரையின் நடுப்பகுதியில் காண்பிக்கப்படுகிறது.
- தொற்று காலத்தை கருத்தில் கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ், ஆன்ட்ராய்டு மற்றும் IOS களின் சேட் வசதி, வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதியை அமைத்துள்ளது.
- விண்டோஸ் 11 AI ஆல் இயங்கக்கூடிய விட்ஜெட்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்திய செய்திகள், வானிலை நிலவரம், உங்களுக்கான அறிவிப்புகள் இவற்றை வழங்கும் சாளரம் இதில் உள்ளது.
- ஒரே நேரத்தில் பல விண்டோக்களில் பயன்படுத்தும் விதமாக ஸ்னாப் லேஅவுட் முறை இடம்பெற்றுள்ளது.
- இதிலிருக்கும் ஜெஸ்சர் மற்றும் ஸ்ட்ரைக் ஆகியவை மேம்படுத்தப்பட்டிருப்பதால், தொடுதிரையோடு இருக்கும் உங்களது லேப்டாப் அல்லது கணினியில் விசைப்பலகையின்றி பயன்படுத்த முடியும்.
- இதில் அனைத்து திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் தொகுப்பு இடம்பெற்றுளளது.
- இதனை பயன்படுத்தி திரைப்படங்கள் அல்லது வெப் சீரிஸ்களை வாங்க முடியும்.
- மேலும், கேமிங் மீது ஆர்வம் உடைவர்களுக்கான பிரத்யேக விண்டோ மற்றும் பல சிறப்பம்சங்கள் இதில் இருப்பதால் இது சிறந்த கேமிங் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- இந்த விண்டோஸ் 11 இல் அமேசான் ஆப் ஸ்டோர் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் செயலிகளை பதிவிறக்கம் செய்யமுடியும். ஆன்ட்ராய்டு செயலிகள் அனைத்தையும் சில விதிமுறைக்குட்பட்டு பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
- இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வாய்ஸ் டைப்பிங் முறை இடம்பெற்றுள்ளது. இதனால் வேகமாக தட்டச்சு செய்ய முடியும்.
இது போன்று சிறந்த அம்சங்கள் விண்டோஸ் ஓஎஸ் 11 இல் இடம்பெற்றுள்ளது.