பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக செல்வீர்களா என்று கேட்டதற்கு கூப்பிட்டால் கண்டிப்பாக சென்று வச்சு செய்வேன் என்று சுரேஷ் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது . அதில் முதல் வாரத்தில் ரேகா வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்தார். அதனையடுத்து இரண்டாம் வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் . இதனையடுத்து கடந்த வாரம் சிறப்பாக விளையாடிய சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் . இது பலருக்கும் கடும் அதிர்ச்சியாகவே இருந்தது .
எல்லோருக்கும் கடும் போட்டியாளராக இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி அடிக்கடி தந்திரங்களை பயன்படுத்தியும், கொளுத்தி போட்டும் போட்டியை சுவாரசியமாக கொண்டு சென்றார் . அவர் வெளியேறியதும் பலருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வம் குறைந்து விட்டதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் அவர் தனது யூடுயூப் சேனலில் ரசிகர்களிடம் லைவ்வில் பேசிய சுரேஷ் சக்கரவர்த்தி, நீங்கள் கடந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வனிதா சென்றதை போன்று உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் பிக்பாஸ் வீட்டினுள் செல்வீர்களா என்று ரசிகர் ஒருவர் கேட்க , கண்டிப்பாக தன்னை கூப்பிட்டால் பிக்பாஸ் வீட்டினுள் சென்று அனைவரையும் வச்சு செய்வேன் என்று கூறியுள்ளார் . மேலும் நீங்கள் என் மீது இந்த அளவுக்கு அன்பு வைத்திருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.
மேலும் பேசிய அவர் , எடுப்பார் கைப்பிள்ளையாக மற்ற போட்டியாளர்கள் எல்லாம் இருக்க , இடுப்பில் இருந்து இறங்காத பிள்ளையாக சோம் மட்டும் உளளார் என்று தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் மற்ற போட்டியாளர்களை பயந்து தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி விட்டீர்களா என்று ரசிகர் கேட்டதற்கு , அவர்கள் எல்லாம் பல்லு புடுங்கின பாம்புகள் என்றும், அவர்களுக்கு நான் ஏன் பயப்பட வேண்டும் , அவர்கள் எல்லோரும் தான் என்னை பார்த்து பயந்தார்கள் என்று கூறியுள்ளார் . மேலும் அவர் தனது யூடுயூப் சேனலில் தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சனம் செய்து ஒளிப்பரப்ப உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…