கோடைக்கு சுவையான ஆப்பிள் மில்க் சேக் செய்வோமா ?
- சுவையான ஆப்பிள் மில்க் சேக் செய்வது எப்படி?
கோடைகாலம் துவங்கியுள்ளது. நம்மில் அதிகமானோர் அதிகமாக குளிர்பானங்களை தான் விரும்பி குடிப்பதுண்டு. நாம் கடையில் விற்க கூடிய மேலை நாட்டு குளிர்பானங்களை விரும்பி குடிப்பதை விட, பழங்களால் செய்யப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது மிகவும் நல்லது.
தற்போது, சுவையான ஆப்பிள் மில்க் செக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- ஆப்பிள் – ஒன்று,
- பால் – 1 கிளாஸ்
- பேரீச்சம் பழம் – 4-5
- சர்க்கரை – 1 ஸ்பூன்
செய்முறை
பாலை நன்றாக தண்னீர் சேர்க்காமல் காய்ச்ச வேண்டும். ஆப்பிளை தோல் மற்றும் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். பேரீச்சம் பழத்தை சிறுது நீரில் கழுவி, அதன் தொல் மற்றும் கொட்டையை நீக்கி வைக்க வேண்டும்.
பின், இதை பாலில் நன்றாக ஊற வைக்க வேண்டும். ஆப்பிள் துண்டை பேரீச்சம் பழம் சேர்த்த பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் ஹெல்த்தியான ஆப்பிள் டேட் ஷேக். தேவைப்பட்டால், இதில் சர்க்கரை அல்லது தேன் சேர்த்தும் பரிமாறலாம்.