வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக இப்படம் வெளியாகிறது.
இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் இரண்டாம் பாடல் வெளியாகவுள்ளது.
வெங்கட்ப்ரபுவின் அடுத்த திரைப்படம்.?
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு பான் இந்தியா படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் அரவிந்த் சாமி, பிரபுதேவா, கஜோல் ஆகிய மூவரும் நடிக்கவுள்ளதாகவும், நடிகர் சுதீப் நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
சுதீப்பை இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. மேலும், வெங்கட் பிரபு இயக்கும் இந்த பான் இந்தியா படத்தில் பிரேம் ஜி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் அல்லது இசையமைப்பாளர் தமன் இருவரில் ஒருவர் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மாநாடு படம் வெளியான பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரவிந்த் சாமி, பிரபுதேவா, கஜோல் மூன்றுபேரும் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு திரைப்படத்தில் நடித்திருந்தார்கள் எனப்து குறிப்பிடத்தக்கது.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…