முடிவுக்கு வருமா போர்? – உக்ரைன்-ரஷ்யா இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

Published by
Edison

உக்ரைன்-ரஷ்யா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா – உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கிடையே போரை முடிவுக்கு கொண்டுவர நேற்று முன்தினம் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்டை நாடான பெலாரஸில்  நடைபெற்றது. அப்போது ரஷ்யப் படைகள் உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டுமெனவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீண்ட நேரம் நடந்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என ரஷ்யாவும், உக்ரைனும்  அறிவித்தனர். நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தபோது ரஷ்ய படை தாக்குதலை குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் தாக்குதலை அதிகரிக்கத் தொடங்கியது.அந்த வகையில், கார்கிவ் நகரில் ரஷ்ய படை ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

மேலும்,உக்ரைனின் கார்கிவ் நகரில் நேற்று காலை நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில்,ரஷ்யா -உக்ரைன் இடையே இன்று மீண்டும் இரண்டாவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையிலாவது இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு போர் முடிவுக்கு வருமா? என உலக நாடுகள் எதிர்பார்ப்பில் உள்ளன.

 

Recent Posts

“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு  மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…

11 hours ago

இனி இப்படிதான்! ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு!! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.!

கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…

11 hours ago

“வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக ரஹானே”… கேப்டனை மாற்றியது ஏன்? கேகேஆர் விளக்கம்.!

டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…

13 hours ago

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்!

சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…

14 hours ago

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…

15 hours ago

நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

15 hours ago