தல அஜித்தின் வலிமை படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் அல்லது மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தல அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் படத்தில் நடித்து வருகிறார் . போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் ஹூமா குரேஷூ , யோகி பாபு, பேர்லி மன்னி , கார்த்திகேயா உள்ளிட பலர் நடிக்கின்றனர் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்பட்டது .
படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் ரேஸ் காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது . சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கியதாகவும் கூறப்பட்டது. இதுவரை இந்த படத்தில் இருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில் தீபாவளி விருந்தாக ஏதாவது அப்டேட் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர் .
அந்த வகையில் தீபாவளி தினத்தன்று வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வலிமை படக்குழுவினரிடமிருந்து வெளி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . வலிமை படத்தின் அப்டேட் மட்டும் இருந்தால் ரசிகர்கள் இந்த தீபாவளியை தல தீபாவளியாக கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை .
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…