#Breaking:சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற வில் ஸ்மித்!

Published by
Edison

சிறந்த நடிகருக்கான ‘ஆஸ்கர் விருதை’ வில் ஸ்மித் வென்றுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்று வரும் கோலாகலமான விழாவில் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,சிறந்த நடிகருக்கான ‘ஆஸ்கர் விருதை’ வில் ஸ்மித் வென்றுள்ளார்.கிங் ரிச்சர்ட் திரைப்படத்தில் நடித்ததற்காக வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வீனஸ் – செரீனா வில்லியம்ஸ் சகோதரிகளின் தந்தையாக நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் தட்டிச் சென்றுள்ளார்.

இதனிடையே இன்று காலை வெளியான அறிவிப்பின்படி,”DUNE” திரைப்படமானது சிறந்த ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை,காட்சி அமைப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.குறிப்பாக,சிறந்த ஒலி,தயாரிப்பு வடிவமைப்பு பிரிவுகளிலும் “DUNE” திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

அதே சமயம்,சிறந்த விஷ்வல் எபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருதை DUNE படத்திற்காக நான்கு பேர் பெற்றுக் கொண்டனர்.சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருதை DUNE திரைப்படத்திற்காக இசையமைப்பாளர்கள் பெற்றனர்.

  • மேலும்,வெஸ்ட் சைடு ஸ்டோரி படத்தில் நடித்த அரியானா டிபோஸ்-க்கு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவண குறும்படமாக தி குயின் ஆஃப் பேஸ்கட்பால் தேர்வாகியுள்ளது.
  • சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை “CODA” படத்தில் நடித்ததற்காக டிராய் கோட்சூர் பெற்றுள்ளார்.
  • சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை ‘என்காண்டோ’ வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

மேட்ச் ஓவர்! சென்னையில் வைத்தே சம்பவம் செய்த கொல்கத்தா…8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

6 hours ago

தோனி அவுட்டா இல்லையா? அம்பயர் முடிவால் அப்செட்டான சென்னை ரசிகர்கள்!

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…

6 hours ago

முதல் பேட்டிங்கிலும் சொதப்பிய சென்னை…கொல்கத்தாவுக்கு வைத்த சின்ன இலக்கு!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…

7 hours ago

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம்…எம்பி கனிமொழி காட்டம்!

சென்னை :  2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…

8 hours ago

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு! சென்னையில் ருதுராஜ் பதில் யார்?

சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…

9 hours ago

பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் : நயினார் நாகேந்திரனுக்கு போட்டியாக ஒருவர் வேட்புமனு?

சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…

10 hours ago