ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் தொடங்கி நேற்று அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறப்பாக நடைபெற்றது. சிறந்த நடிகருக்கான ‘ஆஸ்கர் விருதை’ வில் ஸ்மித் வென்றார்.
இந்த நிகழ்ச்சியின் போது, ஸ்டான்ட்-அப் காமெடியனான கிறிஸ் ராக்ஹாலிவுட் படமான GI Jane படத்தில் இராணுவ வீராங்கனையின் தோற்றம் தலைமுடியற்று வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தையும், வில் ஸ்மித் மனைவி ஜடா alopecia என்கிற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கும் இதனால், இரண்டையும் ஒப்பிட்டு கிறிஸ் ராக் பேசினார். அவர் பேசிய அந்த ஜோக் வில் ஸ்மித்தை கோபப்படச் செய்தது.
இதனால் கோபமடைந்த வில் ஸ்மித் வேகமாக சென்று கிறிஸை பளார் என கன்னத்தில் அறைந்தார். அறைந்துவிட்டு “என்னுடைய மனைவியின் பெயரை உன் வாயில் இருந்து சொல்லாதே” என கூறிவிட்டு சென்றார். அந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது.
இந்நிலையில், வில் ஸ்மித் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தது தொடர்பாக ஆஸ்கர் நிர்வாகம் ஸ்மித் மீது விசாரணையை தொடங்கியுள்ளது. வில் ஸ்மித் செயலுக்கு ஆஸ்கர் நிர்வாகம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, ஸ்மித் மீது ஆஸ்கர் சட்ட விதி, கலிபோர்னியா சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…