நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் குறித்து கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள கோவிலை பார்வையிட்ட பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருக்கும் இவர்கள் வழக்கமாக இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். இவர்களது திருமணம் விரைவில் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது .
சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் தங்களது திருமணத்தை கோவிலில் வைத்து எளிமையாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில் இந்த காதல் ஜோடி தங்களது திருமணத்தை நடத்துவதற்காக பல கோயில்களில் ஏறி இறங்குவதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள ராகு கோவிலுக்கு வருவதாகவும், அவற்றை பார்வையிட்ட பின்னர் அவரது திருமணத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சில தகவல்கள் கசிந்துள்ளது. நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண், ரஜினியின் அண்ணாத்த மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரண்டு காதல் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…