“வாத்தி COMING” -ரசிகர்களின் தீபாவளி ட்ரீட்டாக மாஸ்டர் டீசர்.?

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போன இந்த படத்தின் ரிலீஸ் தேதி திரையரங்குகள் திறந்த பின்னரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை . ஆனால் களத்தில் சந்திப்போம்,பிஸ்கோத், இரண்டாம் குத்து,சூரரை போற்று, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்கள் தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது .
அதனுடன் தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலிருந்து ஒரு பாடலும் , ஈஸ்வரன் படத்திலிருந்து டீசரும் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியிடப்பட உள்ளது . இந்த நிலையில் தளபதி ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட வாய்ப்பு உள்ளதாக ட்விட்டரில் ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.
ஆனால் டீசர் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிடவில்லை . இந்த தீபாவளிக்கு தளபதி ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்களா அல்லது அவர்களது விருப்பம் போன்று மாஸ்டர் டீசர் வெளிவருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் தேதி ரிலீஸ் தேதி முடிவு செய்த பின்னரே அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது ..
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025