நடிகர் விஷால் நேற்றைய தினம் அர்ஜுன் அவர்களுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், மீண்டும் உங்களுடன் இணைந்து நடிக்க காத்திருப்பதாக கூறியுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் இரும்புதிரை. இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாக நடித்து கலக்கியிருப்பார். தொழில்நுட்ப வளர்ச்சியால் நடைபெறும் பிரச்சனைகள் மற்றும், அதனை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் தனது பிறந்தநாளை அர்ஜூன் அவர்கள் கொண்டாடினார். அவருக்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் குருவான அர்ஜூனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததுடன், உங்களுடன் மீண்டும் நடிக்க காத்திருப்பதாக கூறியுள்ளார். அதற்கு ரசிகர்கள் இரும்புதிரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…