கொரோனாவின் கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பிக்குமா இந்தியா? – அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள்

Default Image

சூரிய ஒளியில் உள்ள  ஐசோபிரைல் 30 விநாடிகளில் கொரோனாவை கொல்லும்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. நாளுக்குநாள் இதன் தாக்கம் அதிகரித்து வருகிற நிலையில், இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல், உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளனர். அந்த பேட்டியில், உள்நாட்டு பாதுகாப்பு துறையின் அறிவியல்  மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அந்த ஆய்வின்படி, சூரிய ஒளியின் வெப்பம் மற்றும் ஈரப்பதம்  ஆகியவை வைரஸ் பரவலை குறைப்பதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்க கூடுமென்றும், அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் கொரோனா நோய் பரவல் சங்கிலியை பலவீனப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், சூரிய ஒளியில் இருந்து வெளிவரும் புற ஊதாக்  கதிர்கள் கொரோனாவை பலவீனப்படுத்தி அழிப்பதாகவும், 75 டிகிரி முதல் 80 டிகிரி வரை சூரிய ஒளி வெளிப்படும்போது சில நிமிடங்களில் வைரஸ் இறக்க  கூடும் என்றும், சூரிய ஒளி 95 டிகிரி பாரன்ஹீட் அல்லது 38 டிகிரி செல்சியஸ் இருக்கும் போதும், 80 சதவீதம் அளவுக்கான ஈரப்பதமும் 18 மணிநேரம் என்ற  கொரோனாவின் ஆயுட்காலத்தை பாதியாக குறைக்கிறது.

மேலும் அவர்கள் கூறுகையில், சூரிய ஒளியில் உள்ள  ஐசோபிரைல் 30 விநாடிகளில் கொரோனாவை கொல்லும் என்றும், அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் கொரோனா வைரஸ் பரவுவதை வேகமாக தடுக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சூரிய ஒளியில் உள்ள ஐசோபிரைல்   மற்றும் ஆல்கஹாலில் கொரோனா வைரஸ் 30 வினாடிகளில் அழிவதை பார்க்க முடிகிறது என கூறியுள்ளனர். சூரிய ஒளி பூமியின் மீது படும்போது தரை தளத்திலும், காற்று மண்டலத்திலும் அது வேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்படுகிறது என்றும், அதன் வீரியத்தை குறைய செய்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது கொலைவெறி தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், குறிப்பாக இந்தியாவில் கோடை காலம் என்பதால் இந்தியாவிற்கு இது மிக சாதகமாக உள்ளது என தெரிவித்துள்ளனர். சாதகமான சூழ்நிலை நிலவினாலும், மக்கள் முகக்கவசம் அணிவதையும், சமூக விலகளையும் ஒருபோதும் கைவிடக்கூடாது என தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்