கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டு தீயில் இதுவரை 2.44 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் பரவி வரக்கூடிய காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள சேதாரங்கள் குறித்து கலிபோர்னியா மாகாண வனத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 2.44 லட்சம் ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது, இது வனப்பகுதியில் 32% எனவும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த தீயின் காரணமாக இதுவரை 69 கட்டிடங்கள் இடிந்து விழுந்து உள்ளதாகவும், ஒன்பது கட்டிடங்கள் சேதாரமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வனத்தீ அமெரிக்கா முழுவதும் உள்ள 83 க்கும் மேற்பட்ட வனப்பகுதியில் பரவி வருவதாகவும், இதனால் 10,435 கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை ஒட்டு மொத்தமாக 400 கட்டடங்களும் 348 வாகனங்களும் இந்த தீயால் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த தீக்கு காரணமானவர்களை தேடி வருவதாகவும் அம்மாகாண வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…