அதிரடியாக விளையாடி பங்களாதேஷ் அணிக்கு 322 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மேற்கிந்திய தீவுகள் அணி!
இன்றயை 23வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் பங்களாதேஷ் அணி மோதுகிறது. இப்போட்டி டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானதில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி கேப்டன் மஷ்ராஃப் மோர்டாசா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
முதலில் களமிறங்கிய தொடக்க வீரர்கள் கிறிஸ் கெயில் மற்றும் ஏவின் லெவிஸ் களமிறங்கினர்.இதில் கிறிஸ் கெயில் எந்த ஒரு ரன்களும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஏவின் லெவிஸ் 70 ரன்களும் அடித்தனர். அதன் பின்னர் களமிறங்கிய ஷை ஹோப், நன்றாக ஆடினார் அவர் 97 ரன்கள் குவித்தார்.. அணியின் ஸ்கோரூம் உயர்ந்தது.
பூரான் 25 ரணகளம் , ஹெட்மார் சிறப்பாக விளையாடி 26 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். ஹோல்டர் 33 ரன்களும் , பிராவோ 19 ரன்களும் , தாமஸ் 6 ரன்களுடன் கடைசிவரை காளத்தில் இருந்தார். 50 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் விளாசி உள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.
இந்நிலையில் 322 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது பங்களாதேஷ் அணி.