ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் லிட்டில் பாய் மற்றும் ஃபேட் மேன் அழைக்கப்பட காரணம்?

Default Image

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் லிட்டில் பாய் மற்றும் ஃபேட் மேன் அழைக்கப்பட காரணம்.

ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது, ஆகஸ்ட் 6, 1945-ல் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டது. இந்த குண்டு வீச்சால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வாஹிர்க்கு பிறகு பிறந்த குழந்தைகள் பலரும் ஊனமுற்ற நிலையில் தான் பிறந்துள்ளனர்.

பல நாடுகளில், அவர்களது கைவசம் அணு ஆயுதங்கள் உள்ள நிலையில், உலகத் தலைவர்கள் ஒருவருக்கொருவர் பல அச்சுறுத்தல்களைக் கொண்டிருந்த போதிலும், யாரும் மற்றொரு நாட்டின் மீது வெடிகுண்டு வீசவில்லை.

1945 ஆம் ஆண்டில், அமெரிக்கா இரண்டு குண்டுகளை உருவாக்க 2 பில்லியன் டாலர் செலவிட்டது. அந்த நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், வரலாற்றில் மிகப் பெரிய அறிவியல் சூதாட்டத்திற்காக நாங்கள் இரண்டு’ பில்லியன் டாலர்களை செலவிட்டோம். நாங்கள் வென்றோம்.’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இயற்பியலாளர் ராபர்ட் செர்பர் குண்டுகளுக்கு அவற்றின் வடிவங்களின் அடிப்படையில் பெயரிட்டார். அதன்படி, ஹிரோஷிமாவைத் தாக்கியது முதலில் ‘மெல்லிய மனிதன்’ என்று அழைக்கப்பட்டது, ஏனெனில் இது ஒரு நீண்ட, மெல்லிய சாதனம் மற்றும் அதன் பெயர் டாஷியல் ஹம்மெட் எழுதிய தின் மேன் துப்பறியும் நாவல்களிலிருந்து வந்தது. ஆனால், லிட்டில் பாய் மெல்லிய மனிதனின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாகும்.  மேலும்,”ஃபேட் மேன்” வட்டமாகவும் கொழுப்பாகவும் இருந்தது, எனவே இது காஸ்பர் குட்மேன் என்ற பெயரிடப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்