பப்பாளியை சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நற்பயன்கள் என்னென்ன..?
பப்பாளி பெண்களுக்கு மட்டும் தான் சிறந்த உணவாக இருக்கும் என்கிற தவறான ஒரு கருத்து நம்மிடையே பரவி உள்ளது. ஆனால், உண்மை என்னவென்றால், பப்பாளி என்பது ஆண், பெண் இருவருவருக்கும் சிறந்த உணவாக உள்ளது.
பப்பாளியை சாப்பிட்டு வந்தால் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். பப்பாளியில் உடல் எடை குறைப்பு முதல் இளமையாக நீண்ட ஆயுளுடன் இருக்க கூடிய நன்மைகள் உள்ளன. மேலும் இதை பற்றிய தகவல்களை இங்கு அறிந்து கொள்வோம்.
மன அழுத்தம்
பழங்களில் ஒரு அற்புதமான பழம் இந்த பப்பாளி. பலவித ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. முக்கியமாக வைட்டமின் சி இதில் அதிக அளவில் இருப்பதால் மன அழுத்தம் ஏற்படுத்தாமல் நம்மை காத்து கொள்ளும். மேலும் ஹார்மோன்களை சீராக உற்பத்தி செய்யும் தன்மையும் இதற்குண்டு.
கொலஸ்ட்ரால்
உடலில் பல பகுதிகளில் இந்த கொலெஸ்ட்ரால்கள் தேங்கி இருக்கும். இதில் உள்ள இரு வகைகளில் கெட்ட கொலஸ்ட்ரால் தான் அதிக ஆபத்தானது. பப்பாளியை சாப்பிட்டு வருவதன் மூலமாக உடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைக்க இயலும். இதனால் இதய நோய்களும் தடுக்க படும்.
எதிர்ப்பு சக்தி
நோய்கள் நம்மை அண்டாமல் இருக்க கட்டாயம் நமது உடலுக்கு எதிர்ப்பு சக்தி அதிக அளவில் இருக்க வேண்டும். இதன் அளவை அதிகரிக்க கூடிய ஆற்றல் பப்பாளியில் உள்ளது. காரணம் இவற்றில் இயற்கையாகவே உள்ள வைட்டமின் சி, போன்ற ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் தான்.
மூட்டு வலி
இளம் பருவத்திலே இன்று பலருக்கும் மூட்டு வலி பிரச்சினை வர தொடக்கி உள்ளது. இந்த மூட்டு வலியில் இருந்து உங்களை காத்து கொள்ள பப்பாளியை உணவில் சேர்த்து கொண்டாலே போதும்.
இளமையான முகத்திற்கு
அதிக இளமை வேண்டுமென்றால், அதற்கு பப்பாளியை தினமும் சாப்பிட்டு வந்தாலே போதுமானது. அல்லது இதனை முகத்தில் பூசியும் வரலாம். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் வுமன் ஈ சருமத்தை அதிக காலம் இளமையாக வைத்து கொள்ளுமாம்.
செரிமான கோளாறுகளுக்கு
யாருக்கெல்லாம் செரிமான பிரச்சினை உள்ளதோ அவர்கள் பப்பாளியை சாப்பிட தொடங்கிய குறுகிய காலத்திலே இந்த கோளாறுக்கு முற்றுப்புள்ளியை தந்து விடலாம். மேலும், பெண்களுக்கு ஏற்பட கூடிய மாதவிடாய் காலத்து வலிகளுக்கும் இது தீர்வை தரும்.