விஜய்சேதுபதி எதுக்கு பண்ணாரு ? கொந்தளிக்கும் வியாபாரிகள்

Default Image

விஜய் சேதுபதி நடித்த விளம்பரத்திற்கு சிறிய மளிகை கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மக்கள்  செல்வன் என்று தமிழ் திரை உலகில் அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி.இவர் தனது கவனத்தை முழுக்க முழுக்க சினிமாவில் செலுத்தி வந்தார்.வருடத்திற்கு குறைந்தது 3 படங்கள் என்ற விகிதத்தில் நடித்து வருகிறார்.
ஆனால் இதே வேளையில் ஒரு சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.அவர் நடித்த  விளம்பரம் ஒன்றிற்கு  சிறிய மளிகை கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.அதாவது தற்போது அனைத்து பொருள்களும் ஆன்லைனில் விற்பனையாகி வரும் நிலையில் அதேபோல் பிரபல நிறுவனம் பலசரக்கு பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய உள்ளது.இதற்கான விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.இதற்கு  சிறிய மளிகை கடை வியாபாரிகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் வருகின்ற 4- ஆம்  தேதி விஜய் சேதுபதியின் அலுவலகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்