கொரோனா தடுப்பூசிக்கு ஸ்பூட்னிக்-வி என ரஷ்யா ஏன் பெயர் வைத்தது.?!
ரஷ்யாவில் முதன் முதலாக விண்ணில் ஏவப்பட்ட முதல் செயற்கைகோள் தான் ஸ்பூட்னிக் 1. ஆதலால் தான் ஸ்பூட்னிக் வி என கொரோனா தடுப்பு மருந்திற்கு பெயர் வைத்துள்ளாராம்.
உலகின் முதல் கொரோனா தடுப்பூசி என அறியப்படுகிறது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்பூட்னிக் தடுப்பூசி. இதற்கு எதற்காக ஸ்பூட்னிக்-வி என பெயர் வைத்தார்கள் என கேள்வி எழுந்த வண்ணம் இருந்தது.
அதன் காரணத்தை அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், 1957இல் சோவியத் யூனியன் பிரிந்ததற்கு பிறகு உள்நாட்டில் உருவாக்கப்பட்டு, விண்ணில் ஏவப்பட்ட முதல் செயற்கைகோள் தான் ஸ்பூட்னிக்.
சோவியத் யூனியனால் விண்ணில் ஏவப்பட்ட முதல் செயற்கைகோள் இதுவாகும் ஸ்பூட்னிக் என்றால் சக மனிதன் என்பது பொருள். ஆனால், அது நாளடைவில் ஸ்பூட்னிக் என்றால் செயற்கைகோள் எனும் அர்த்தம் கொள்ளும் ரஷ்யாவில் பிரபலமானது. அதனால் தான் கொரோனா தடுப்பூசிக்கும் இதே பெயரை அரசு வைத்துள்ளது என தெரிவித்தார்.