இன்றைய சூழலில் பல பெண்கள் சிசேரியன் பிரசவம் செய்து கொள்ள விரும்புவது ஏன்?
அக்காலத்தில் இருந்த அனைத்து விதமான முறைகள்,பழக்க வழக்கங்கள், உணவுகள் என எல்லாமே முற்றிலுமாக இக்காலத்தில் மாறி வருகிறது; இந்த நவீன யுகத்தில் வாழும் நாம், அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்றவாறு நம் வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொண்டுள்ளோம்.
வாழ்க்கை முறையில் நவீன முறைக்கு மாறிய நிலை மாறி, வாழ்க்கை கொடுக்கவே நவீன முறைகளை கையாள தொடங்கி விட்டனர், பல பெண்கள்; இன்றைய சூழலில் பல பெண்கள் சிசேரியன் பிரசவம் செய்து கொள்ள விரும்புவது ஏன் என்பது இப்பதிப்பில் பார்த்து அறியலாம்.
வலியை தாங்கும் வலிமையின்மை
பிரசவ வலி என்பது மற்ற சாதாரண உடல் வலிகள் போல் இல்லை; இடுப்பெலும்பை பிளந்து குழந்தையை வெளியே, பூமிக்கு கொண்டு வரும் நிகழ்வே பிரசவம். இந்த பிரசவ வலியை தாங்கும் வலிமை குன்றிய பெண்கள் பலர், வலி குறைந்த சிசேரியன் பிரசவத்தை மேற்கொள்ள விரும்புகின்றனர்.
பொறுமையற்றவர்கள்
பிரசவத்தின் வலி ஏற்பட சில சமயங்களில் பல நாட்கள், வாரங்கள் கூட ஆகலாம்; ஆனால் அச்சமயங்களில் ஏற்படும் பொய்யான பிரசவ வலியை சகித்துக் கொள்ளும் தன்மையற்ற பெண்கள், பொறுமை இழந்து சிசேரியன் பிரசவம் செய்து கொள்வதுண்டு.
பயம்
பிரசவ வலியை பற்றிய பயம் கொண்ட பெண்கள், சுகப்பிரசவம் செய்வதைத் தவிர்த்து, சிசேரியன் பிரசவம் செய்து கொள்கின்றனர்.
நப்பாசை
சிசேரியன் மூலம் குழந்தையை பிரசவித்தால் குறைவான வலி ஏற்படும், என்று உண்மை நிலை அறியாமல் நப்பாசை கொண்ட பெண்கள் சுகமான சுகப்பிரசவத்தை விடுத்து, சிசேரியன் பிரசவம் செய்து கொள்கின்றனர்.
பிறப்புறுப்பு
சுகப்பிரசவத்தினால் பிறப்புறுப்பில் ஏற்படும் அறுவை சிகிச்சையை விரும்பாத பெண்கள், பிறப்புறுப்பை காத்துக் கொள்ள நினைக்கும் மகளிர் சிசேரியன் பிரசவத்தை மேற்கொள்கின்றனர்.