டிரம்பின் சர்ச்சை கருத்தை நீக்காத பேஸ்புக் நிறுவனத்தின் மீது ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் பேஸ்புக் நிறுவனம், இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.
அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமின்றி, தற்பொழுது அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ச் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, அமெரிக்காவில் விடிய விடிய வன்முறை போராட்டங்கள் நடந்து வருகிறது. வெள்ளை மாளிகை அருகில் போராட்டம் தீவிரமடைந்து கார்கள், பொதுச்சொத்துக்கள் தீ வைக்கப்பட்டு, சூறையாடப்படுகிறது. இதனை கண்டித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், “போராட்டம் என்ற பெயரில் கறுப்பின மக்கள் கடைகளை சூறையாடினால் துப்பாக்கி சூடு நடத்தப்படும்” என தெரிவித்தார்.
இந்த பதிவு, அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த பதிவு, ட்விட்டர் வரைமுறைக்கு எதிரானது என ட்விட்டர் நிர்வாகம் அதனை நீக்கியது. ஆனால், பேஸ்புக் அதனை நீக்கவில்லை. இதனால் பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் அதிருப்தி அடைந்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பேஸ்புக் “டிரம்பின் கருத்து அரசியல் அறிவிப்பாக பார்க்கப்பட்டதாகவும், அதனால்தான் அதனை நீக்கவில்லை” என விளக்கமளித்துள்ளது.
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…