இளையராஜா பிரசாந்த் ஸ்டுடியோவில் ஒருநாள் தியானம் செய்ய ஏன் அனுமதிக்க கூடாது என பிரசாந்த் ஸ்டுடியோவிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இசைஞானி இளையராஜா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தான் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார்.சமீபத்தில் ஸ்டுடியோவின் உரிமையாளர்கள் இளையராஜாவை வெளியேற்றியதுடன், தனது இசை குறிப்புகளை சேதப்படுத்தியதாக கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.
தற்போது இளையராஜா அவர்கள் பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து தனக்கு சொந்தமான பொருட்களை கூட எடுக்க விடாமல் வெளியேற்றியது நியாயமில்லை. இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும், எனவே தன்னை ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகை கொடுக்குமாறு ஸ்டுடியோ உரிமையாளர்களான சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இளையராஜா தரப்பில், 40 ஆண்டுகளாக இளையராஜா பிரசாந்த் ஸ்டுடியோவில் பணியாற்றியதால், ஒருநாள் தியானம் செய்துவிட்டு பொருட்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இளையராஜா பிரசாந்த் ஸ்டுடியோவில் ஒருநாள் தியானம் செய்ய ஏன் அனுமதிக்க கூடாது என பிரசாந்த் ஸ்டுடியோவிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…