#IPL2021: “கேன் வில்லியம்சன்க்கு ஏன் அணியின் இடமில்லை?”- பயிற்சயாளர் விளக்கம்!
ஐபிஎல் தொடரின் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் அதிரடி வீரர் கேன் வில்லியம்சன் விளையாடாத நிலையில், அதற்கு பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் விளக்கமளித்துள்ளார்.
14-ம் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. சென்னையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் கொல்கத்தா அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் முதல் போட்டியிலே வென்ற அசத்தியது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் வெளிநாட்டு வீரர்களில் பேர்ஸ்டோ, டேவிட் வார்னர், முகமது நபி, ரஷித் கான் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் கேன் வில்லியம்சன்க்கு நேற்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கவில்லை.
கடந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி தோல்விபெறும் நிலையில் இருந்ததால், அந்த அணியின் வெற்றிக்கு உதவியது கேன் வில்லியம்சன் என்பதை ரசிகர்கள் உட்பட அனைவரும் அறிந்ததே. கடந்த சீசனில் மட்டும் கேன் வில்லியம்சன், 11 இன்னிங்சில் விளையாடி 317 ரன்கள் அடித்தார். இந்தநிலையில், நேற்று அவரை அணியில் எடுக்காததற்கு ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் கூறுகையில், “ஐபிஎல் தொடரில் விளையாட கேன் வில்லியம்சனுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை. அவர் வலைப்பயிற்சியில் இன்னும் கொஞ்சம் அதிகமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது நடந்திருந்தால் பேர்ஸ்டோவிற்குப் பதிலாக கேன் வில்லியம்சன் இடம் பிடித்திருப்பார்” என்று விளக்கமளித்துள்ளார்.