கிறிஸ்துமஸ் குடில், மரம் அமைக்கும் வழக்கம் ஏன்.? எப்படி துவங்கியது தெரியுமா.?
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் குடில் மற்றும் மரம் ஏன் வைக்கப்படுகிறது என்று இந்த சிறு குறிப்பில் நாம் பார்க்கலாம்.
கிறிஸ்மஸ் என்றாலே நம் நினைவுக்கு வரும் முக்கிய விஷயங்களில் ஒன்று கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இந்த குடில் அமைக்கப்படுவது வழக்கம். இயேசு கிறிஸ்து ஏழை வீட்டு குடிசை தொழுவத்தில் தான் பிறந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அதனை குறிப்பிடும் வகையில் தான் இந்த குடில் அமைக்கப்படுகிறது என்பதும் நமக்கு தெரியும்.
முதன் முதலில் பிரான்சிஸ் அசிசியார் தான் 14ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் குடிலை வடிவமைத்தார். அவர் மிகப்பெரிய செல்வந்தரின் மகன். அந்த செல்வங்களை விட்டுவிட்டு இறைவனை பின்பற்ற துவங்கியவர். இவர் முதன் முதலில் கிறிஸ்மஸ் குடிலை அமைத்து கிறிஸ்துமஸை கொண்டாடினார்.
அப்போது அந்த குடிலில் வைக்கப்பட்ட வைக்கோள்கள்
‘குணமாக்கும் வைக்கோல்’ என பெயரிடப்பட்டு அதன் மூலம் பலரும் தங்கள் உடல், மன நோய்களிலிருந்து விடுபட்டு பலன் பெற்றனர் என்று கூறப்படுகிறது. அதன்பின்னர் குடில் அமைத்த அந்த இடத்தில் மிகப்பெரிய தேவாலயம் ஒன்று அமைக்கப்பட்டது.
அதேபோல் கிபி பத்தாம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த போனிபோஸ் என்ற பாதிரியார் ஒரு முறை ஜெபக்கூட்டத்திற்கு செல்லும் போது, பழங்குடியின மக்கள் ஓக் எனப்படும் மரத்தை வழிபட்டு வந்துள்ளனர். கிறிஸ்துவை வணங்காமல் இந்த மரத்தை வழிபடுகிறார்கள் என்று அந்த மரத்தை அங்கிருந்து நீக்கி விட்டார் பாதிரியார். அதன் பிறகு சில நாட்களிலேயே அந்த மரம் மீண்டும் வளர ஆரம்பித்து விட்டது. இதை கண்டதும் இயேசு உயிர்த்தெழுந்தது போல இந்த மரமும் உயிர்த்தெழுந்து விட்டது என அதனை அற்புதச் செயலாக அனைவரும் கருதி, அதன் பிறகு ஓக் மரத்தை கிறிஸ்து மரம் என்று வழிபட தொடங்கி விட்டனர்.
இன்று முதல் தற்போது வரை கிறிஸ்துமஸ் எனப்படும் இயேசு கிறிஸ்து பிறந்ததை குறிக்கும் விழாவில் கிறிஸ்துமஸ் குடிலும், இயேசு கிறிஸ்து அற்புத நிகழ்வை குறிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் மரமும் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.