“இது மெசஞ்சரா இல்ல இன்ஸ்டாகிராமா??” புதிய லோகோவால் குழப்பமடைந்த பயனர்கள்!
“மெஸஞ்சர்” செயலியின் புதிய அப்டேடால் அதன் லோகோ பார்ப்பதற்கு “இன்ஸ்டாகிராம்” செயலிபோல இருப்பதால், பயனர்கள் குழப்பமடைந்தனர்.
உலகளவில் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் உபயோகித்து வரும் செயலி, பேஸ்புக். இந்நிறுவனம், தங்களின் பயனாளர்கள் சாட் செய்யும் வசதியை எளிமைப்படுத்தும் விதமாக, “மெஸஞ்சர்” எனும் செயலியை அறிமுகப்படுத்தியது. அண்ட்ராய்டு மற்றும் iOS அடிப்படையிலான அனைத்து ஸ்மார்ட்போன்களில் “மெஸஞ்சர்” மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலி ஆகும்.
மேலும், தங்களின் பயனர்களுக்கு சிறந்த அனுபவர்களை கொடுக்கும் விதமாக, பல புதிய வசதிகளை அப்டேட் மூலம் வழங்கி வருகின்றனர். அந்தவகையில், தற்பொழுது நீலநிறத்தில் இருக்கும் லோகோ, பர்பிள் நிறமாக மாறியுள்ளது, பயனர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
It made me confused with my Instagram app – thought it had leaked colour into it! ???? It’s ok. I will just do an Edit Home Screen. ???? pic.twitter.com/kEtXZT1GdT
— Feature Cumbria (@FeatureCumbria) October 17, 2020
அந்தவகையில் தற்போது இந்த செயலியில் லோகோ மாற்றம், ஏ.ஆர்.ஸ்டிக்கர்ஸ், குறிப்பிட்ட மெசேஜ்களை மறைக்கும் வசதி vanish mode (இது இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ளது) போன்ற சில வசதிகளை இந்த அப்டேட் மூலம் வழங்கியது.
கடந்த மாதம் பேஸ்புக் – இன்ஸ்டாகிராம் செயலிகள் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்பொழுது இந்த அப்டேட் மூலம் பேஸ்புக் மெஸஞ்சர் மூலமாக இன்ஸ்டாகிராம் நண்பர்களுடனும், இன்ஸ்டாகிராம் மூலம் ஃபேஸ்புக் மெஸஞ்சர் நண்பர்களுடனும் பேச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.