சளி ஏன் உருவாகிறது…? இதனை இயற்கையான முறையில் கட்டுப்படுத்துவது எப்படி…?
நமது சளி எப்படி உருவாகிறது? அதனை இயற்கையான முறையில் எப்படி வெளியேற்றுவது?
நமது உடலில் வியர்வை எப்படி கழிவு பொருளாக கருதப்படுகிறதோ அது போல தான் சளியும் கருதப்படுகிறது. நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று சளி. முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒரு மனிதனின் உடலில் சளி உற்பத்தி ஆகிக் கொண்டே தான் இருக்கும்.சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள் நமது வாய் மூக்கு தொண்டை நுரையீரல் இரைப்பை போன்ற பகுதிகளில் காணப்படும்.
நமது உடல் சளியை வெளியேற்றிக் கொண்டே இருக்கவேண்டும். ஆனால் நாம் அவ்வாறு சளியை வெளியேற்ற விடாமல், மருந்துகளை உட்கொண்டு சளியை கட்டுப்படுத்துகிறோம். அவ்வாறு கட்டுப்படுத்தும் போது அந்த சளி நுரையீரலில் தேங்கி விடுகிறது. தற்போது இவ்வாறு தேங்கிய நிலையில், காணப்படும் சளியை வெளியேற்ற முற்படும் போது, இருமல், தும்மல், இளைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
நெஞ்சுச்சளி
நெஞ்சு சளிக்கு, தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து, நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளிபிரச்சனை நீங்கும். இஞ்சி சாறு, துளசிச் சாறு, தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடித்தால் சளி, இருமல் மற்றும் நெஞ்சில் சளி சேருதல் குணமாகும்
இருமல்
நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும்.
தொண்டை
இஞ்சியுடன் தேன், லவங்கப் பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.