சீனாவை தொடர்ந்து பல இடங்களில் கொரோனா வைரஸானது மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், உலக நாடுகள் அனைத்தும், இந்த நோய் தொற்றில் இருந்து தங்களது நாட்டை பாதுகாத்து கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
துனிசியா நாட்டின் தலைநகரில் ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக ரோந்துப் பணியில் போலீஸ் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. 4 சக்கரங்கள் கொண்ட இந்த போலீஸ் ரோபோக்கள் முக்கிய தெருக்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த போலீஸ் ரோபோக்களை இனோவா ரோபோடிக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், வெறிச்சோடிய தெருக்களில் யாராவது நடந்து வந்தால் அவர்களை இந்த ரோபோக்கள் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும். ஏன் வீட்டை விட்டு வெளியே வந்தீர்கள்? உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள்? என கேள்வி கேட்கிறது. உடனே அந்த நபர்கள் ரேபோவில் உள்ள கேமரா முன்பு தங்கள் அடையாள அட்டைகள் மற்றும் பிற ஆவணங்களை காட்ட வேண்டும். இதன்மூலம் அதிகாரிகள் அவற்றை எளிதில் சரிபார்த்து தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க முடிகிறது.
மேலும், தேவையில்லாமல் மக்கள் வெளியே வந்து ஊரடங்கை மீறுவது தெரியவந்தால் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கின்றனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…