ஏன் இவ்வாறு செய்தீர்கள் சித்து அக்கா என்று உருக்கமான பதிவை பகிர்ந்து தனது இரங்கலை பாடகி சிவாங்கி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்தவர் சித்ரா . தொகுப்பாளினியாக தொலைக்காட்சியில் அறிமுகமான இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் அதிக ரசிகர்களை பெற்று கொடுத்தது .
மேலும் பல ஷோக்களிலும் கலந்து கொண்டு மற்றவர்களை ஜாலியாக சிரிக்க வைப்பவர்.இவர் அனைவரிடமும் சகஜமாக பழகுபவர் .இந்த நிலையில் இன்று அதிகாலை நடிகை சித்ரா தூக்கில் தொங்கியப்படி பிணமாக மீட்கப்பட்டார் .தனது சீரியலுக்கான படப்பிடிப்பை முடித்து விட்டு நள்ளிரவு தான் தங்கியிருந்த ஓட்டலில் கணவரான ஹேமந்துடன் வந்ததாகவும்,அங்கு அவர் குளிப்பதாக கூறி விட்டு ஹேமந்த் அவர்களை அறையிலிருந்து வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது.
வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் கூறி மாற்று சாவி உபயோகித்து கதவை திறந்து பார்த்த போது பட்டு புடவையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக சித்ரா காணப்பட்டார் . இதனிடையே சித்ராவின் கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து கொலையா, தற்கொலையா என்ற சந்தேகம் போலீசாரிடையே எழுந்துள்ளது.எனவே பல கோணங்களில் விசாரணை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
சித்ராவின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் சக நடிகை, நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில் சித்ராவுடன் பல ஷோக்களில் இணைந்து பணியாற்றிய பாடகியும் ,குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் சிவாங்கி கண்ணீருடன் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அவர் தான் சித்ராவுடன் இணைந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து அக்கா நாம் நேற்று தான் ஆடியும்,பாடியும் மகிழ்ச்சியாக இருந்தோம் .24 மணி நேரம் கூட ஆகவில்லை.அதற்கு முன் எங்களை விட்டு போய் வீட்டீர்கள் .ஏன் இவ்வாறு செய்தீர்கள் . உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் சித்து அக்கா என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…