இந்தோனேசியா விமானம் ஏன் பாதை மாறியது ? விபத்து நடந்த இடம் இதுதான்..!
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து போன்டினாக்கை நோக்கி ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், 62 பயணிகளுடன் ஜகார்தாவில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம், புறப்பட 4 ஆம் நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து, விமானம் மறைந்தது.
SJ182 என்று அழைக்கப்படும் இந்த காணாமல் போன விமானம், “போயிங் 737” மாடல் என்றும், அந்நாட்டு நேரப்படி காலை 07:40 மணிக்கு ஜாவா கடற்பரப்பு வழியாக 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது ரேடாருடனான தொடர்பை இழந்து மாயமானதால், பெண்டன் மாகாண எல்லைக்கு உள்பட்ட ஜாவா கடற்பரப்பில் விமானத்தை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து நடந்த இடம் :
இந்தோனேசியா போக்குவரத்து அமைச்சர் புடி காரியா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,விமான நிலையத்திலிருந்து 20 கி.மீ (12 மைல்) தொலைவில் உள்ள லக்கி தீவுக்கு அருகே விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறையுடன் தொடர்பை துண்டிப்பதற்கு சில நொடிகளுக்கு முன்னர் விமானம் எதிர்பார்த்த விமானப் பாதையில் செல்வதற்குப் பதிலாக ஏன் வடமேற்கு நோக்கிச் செல்கிறது என்று விமானியிடம் கேட்டதாகக் கூறினார்.