தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் அவர்கள் ரஜினிக்கு இணையாக சினிமாயுலகில் வளர்ந்து நிற்பவர். அதை போன்று இவர்களுக்கென்று மிகப் பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டவர். இவர்களின் படம் ரிலீஸ் என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். விஜய் அவர்கள் சமீபத்தில் மாஸ்டர் விழாவில் கூட நண்பர் அஜித் என்று கூறியது மிகவும் டிரெண்டானது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாஸ்டர் படத்தின் ரிலீஸில் உள்ளது. மேலும் அஜித் அவர்கள் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பாடகி சுஜித்ரா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தல மற்றும் தளபதியை குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதில், அஜித் அவர்கள் என்னிடம் ஒருமுறை விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் நீங்கள் பாடிய பாடலான ஒரு சின்னத்தாமரை பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும், விஜய்க்கு எப்படி தான் நல்ல பாடல்கள் கிடைக்கிறதோ என்று சுஜித்ராவிடம் கேட்டதாக கூறியுள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…