சித் ஸ்ரீராம் குரலில் “யார் அழைப்பது”..! மாதவனின் “மாறா” பட பர்ஸ்ட் சிங்கிள்.!
நடிகர் மாதவன் சைலன்ஸ் படத்தை தொடர்ந்து மாறா என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஷராதா ஸ்ரீநாத், அலெக்சாண்டர் பாபு, ஷிவேதா, மெளலி உள்பட பலர் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஓடிடியில் டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. “யார் அழைப்பது” என்ற அந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சித் ஸ்ரீராம் குரல் கொடுக்க கவிஞர் தாமரை எழுதியுள்ளார்.
“Yaar Azhaippadhu” – First single from #Maara out now on all your favourite streaming platforms..https://t.co/Co2pQYCu43@thinkmusicindia @Kavithamarai@sidsriram @ActorMadhavan @ShraddhaSrinath @dhilip2488@ShrutiNallappa @pramodfilmsnew @DesiboboPrateek @thespcinemas pic.twitter.com/qADs8X4Dl3
— Ghibran (@GhibranOfficial) October 28, 2020