தனது திருமணம் குறித்து விளக்கமளித்த நடிகை அனுஷ்கா.
நடிகை அனுஸ்கா தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக அனுஷ்காவும், பிராபாஸும் காதலித்து வருகிறதா கிசுகிசுக்கப்பட்டது. இந்த தகவலை இருவரும் மறுத்தனர். அதனை தொடர்ந்து இவர் ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியானது. தற்போது இவர் ஒரு கிரிக்கெட் வீரரை காதலிப்பதாக கூறப்படுகிறது.
இப்படி தொடர்ந்து இவரது திருமணம் குறித்த வதந்திகள் பரவி வந்த நிலையில், இதுகுறித்து அனுஸ்கா விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, ‘ காதல், திருமணம் என்றெல்லாம் என்னைப்பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. பல தடவை எனக்கு திருமணமும் செய்து வைத்து விட்டார்கள். ஒரு தொழில் அதிபரை காதலிக்கிறேன் என்றனர். டாக்டரை விரும்புவதாக கூறினார்கள். அதன்பிறகு என்னுடன் நடித்த கதாநாயகர்களுடன் இணைத்து பேசினார்கள். இப்போது கிரிக்கெட் வீரரை காதலிக்கிறேன் என்கின்றனர்.
எதுவும் உண்மை இல்லை. என்னை ஏன் இப்படி குறி வைக்கிறார்கள் என்ற வருத்தம் ஏற்படுகிறது. ஆனாலும் நடிகைகள் பற்றி இதுபோல் வதந்திகள் பரவுவது சகஜம்தான். எனது திருமண முடிவை பெற்றோர்களிடம் விட்டுவிட்டேன். அவர்கள் யாரை பார்த்து கையை காட்டுகிறார்களோ அவர் தாலி கட்ட கழுத்தை நீட்டுவேன்.” என்று தனது திருமணம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…