யார் தனது ராஜ்யசபையா எம்.பி சீட் கொடுத்தாலும் அங்கு சேர்ந்து கொள்ளுவேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தானம் நக்கலாக பேசியுள்ளார்.
நடிகர் சந்தானம் இயக்குனர் ஜான்சன் கே அவர்களின் இயக்களின் இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் எனும் புதிய படமொன்றில் நடித்திருக்கிறார். ஆ.வில்சன் அவர்களின் ஒளிபதில்வில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த ப டம் வருகின்ற 12 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்ட கதாநாயகன் சந்தானத்திடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர். அப்பொழுது படத்தில் இணைந்திருப்பது போல அரசியலிலும் உதயநிதி ஸ்டாலினுடன் நிற்பீர்களா என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. அதற்கு எப்பொழுதும் போலவே நக்கலாக பதிலளித்த சந்தானம், எம்.பி.சீட் யார் தந்தாலும் அங்கு சேர்ந்து கொள்வேன் என கூறி சிரித்துள்ளார். அதன் பின் தனக்கு அரசியல் எண்ணம் எல்லாம் கிடையாது எனவும் கூறியுள்ளார்.
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…