பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி அவர்கள் வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் . அந்த வகையில் இன்று கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளும் என்பதால் அதற்கான கொண்டாட்டங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு, குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் .
அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . முதல் வாரம் சுரேஷ் தந்திரங்களை பயன்படுத்தியும், கொளுத்தி போட்டும் போட்டியை சுவாரசியமாக கொண்டு சென்றார் . ஆனால் கடந்த இரு வாரங்களாக குறிப்பாக அர்ச்சனா அவர்களின் வருகைக்கு பின் அமைதியாக உள்ளார் .மேலும் கடந்த வார டாஸ்கில் சுரேஷின் ஈடுபாடும் குறைவாகவே உள்ளது.எனவே இந்த வாரம் சுரேஷ் அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று கிசுகிசுக்கப்படுகிறது .நாமினேஷன் லிஸ்டில் அர்ச்சனா,ஆரி,சனம், பாலாஜி,சோம், அனிதா மற்றும் சுரேஷ் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…