பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஜித்தன் ரமேஷ் அல்லது சம்யுக்தா வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களிடம் கேள்விகள் எழுப்பி வச்சு செய்வது வழக்கம் .ஆனால் இந்த சீசனில் அவர் அதிகம் கண்டிக்காமல் அறிவுரைகள் என்ற பெயரில் டிப்ஸ்களை வழங்கி வருகிறார் .இது பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அது மட்டுமின்றி ஞாயிறன்று நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு, குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் .
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரேகா , வேல்முருகன் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ,சுச்சிஆகியோர் வெளியேறிய நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.இந்த வார நாமினிஷேனில் அனிதா , ரமேஷ், பாலாஜி,ஆரி,சோம்,சனம்,நிஷா ஆகியோரின் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இதில் அனிதா நாமினேஷன் டாப்பிள் கார்டை பயன்படுத்தி சம்யுக்தாவை அவருக்கு பதிலாக நேரடியாக நாமினேட் செய்தார் .
இதிலிருந்து இந்த வாரம் ஜித்தன் ரமேஷ் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . அவர் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது .ஆனால் அவர் இந்த வார கால் சென்டர் டாஸ்க்கில் ரம்யாவிடம் பொறுமையாக பதில் கூறி சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.அதே நேரத்தில் குறைவான வாக்குகளை சம்யுக்தா பெற்றுள்ளதாக ,எனவே அவர் இந்த வாரம் வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது.உண்மையில் இதிலிருந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பது நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும்.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…