உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்கிறது.. WHO எச்சரிக்கை.!
உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்வதாக எச்சரிக்கை விடுக்கும் WHO.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், பலர் இன்னும் அலட்சிய போக்குடன் தான் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அவர்கள் கூறுகையில், அடுத்து வரவிருக்கும் சில மாதங்கள் கடினமானவையாக இருக்க போகிறது என்றும், தேவையற்ற மரணங்களை தவிர்க்கவும், அத்தியாவசிய மருந்து சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், சரியான நடைமுறையை கையாள்வது அவசியம் என்றும், கொரோனாவை கையாள்வதில் உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்வதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.