டெல்டா வகை கொரோனாவால் மத்திய கிழக்கு நாடுகளில் 4-வது அலை உருவாகியுள்ளதாக who எச்சரிக்கை.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் ஆனது தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஆக ஒவ்வொரு நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து பல நாடுகளில் சில தளர்வுகள் வழங்கப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் நான்காம் நிலை உருவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தீவிரமாக பரவக்கூடிய டெல்டா கொரோனா வகை 22 மத்திய கிழக்கு நாடுகளில் 15 நாடுகளில் பரவியுள்ளது.
கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் டெல்டா வகை கொரோனா அதிகரித்துள்ளது. இந்த வகை வைரஸால், பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களாக தான் இருக்கின்றனர். எனவே இப்பகுதியில் நான்காவது கொரோனா அலை பரவி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாதத்தில் நோய்த்தொற்றுகள் 55 சதவிகிதம் மற்றும் இறப்புகள் 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வாரந்தோறும் 310,000 க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவதாகவும், 3,500 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…