தடுப்பூசி பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை எட்டக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அவசர கால மருத்துவ நிபுணர் மைக் ரியான் கூறுகையில் , சர்வதேச நடவடிக்கை இல்லாமல் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனாவால் இதுவரை ஒரு மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளது.சோதனை , தனிமைப்படுத்தல், சமூக இடைவெளி ,முகக்கவசம் அணிவது, கை கழுவுதல் போன்ற அனைத்து மாற்று வழிகளும் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.மேலும் பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது.
கொரோனாவால் அமெரிக்கா,இந்தியா,பிரேசில் ஆகிய நாடுகளில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டனர். கொரோனாவிற்கான சிகிச்சை மேம்பட்டு உள்ளதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளது. ஆனால் தடுப்பூசி பரவலாக இருந்தாலும் 20 லட்சம் (2 மில்லியன் ) பேர் வரை உயிரிழப்பதை தடுக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.
கோவை : தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை விக்ரவாண்டியில் கடந்த மாதம் நடத்தியபோது அதில்…
சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புற்றுநோய் மருத்துவரான பாலாஜி கத்தியால் குத்தப்பட்டு தீவிர…
சென்னை : கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனக்குப் குழந்தை பிறந்த போது, தொப்புள் கொடியை வெட்டுவது போன்று…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 13] எபிசோடில் பணத்திற்காக விஜயா கேஸை வாபஸ் வாங்க சம்மதிக்கிறார்.. சத்யா வீட்டிற்க்கு…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…