உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா பரவலுக்கு மத்தியில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிப்பது, பேரழிவுக்கான செய்முறையாகும் என எச்சரித்துள்ளார்.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகளில் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
கொரோனா பொதுமுடக்க காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவு காரணமாக, பல நாடுகள் ஊரடங்கில் தளர்வுகள் அளித்துக்கொண்டே வருகின்றனர். இந்தநிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா பரவலுக்கு மத்தியில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிப்பது, பேரழிவுக்கான செய்முறையாகும் என எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், ஒரு மாநாட்டில் காணொளி மூலம் உரையாற்றினார். அதில் அவர், உலகளவில் கொரோனா பரவல் இன்னும் ஓயவில்லை எனவும், கொரோனா பரவலுக்கு மத்தியில் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிப்பது, பேரழிவுக்கான செய்முறையாகும் என எச்சரித்துள்ளார். மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தாத நாடுகள், பொதுமுடக்கத்தை தொடரவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் அவர், உலக நாடுகள் பொதுமுடக்கத்தை ரத்து செய்வதில் தீவிரமாக இருந்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மற்றும் மக்கள் உயிரை காப்பது குறித்து தீவிரமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்தியா உட்பட பல நாடுகள், பொதுமுடக்க கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்டே வருகிறது.
அந்தவகையில் இந்தியா, கடந்த சனிக்கிழமை நான்காம் கட்ட தளர்வுகளுடனான பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது. அதில், கூடுதலாக சில தளர்வுகளை அமல்படுத்தியது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரே நாளில் 78,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், நேற்று மட்டும் 78,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 36 லட்சத்தை கடந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…