தடுப்பூசிக்கான ஒழுங்கு நெறிமுறைகளை ரஷ்யா கடைபிடிக்க வேண்டும்.! WHO எச்சரிக்கை.!

Default Image

தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் பல்வேறு சோதனைகளை கடந்து செல்லவது கட்டாயம். அதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஒழுங்கு முறைகளை ரஷ்யா நிச்சயமாக பின்பற்ற வேண்டும் என WHO செய்தித்தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர் தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவைகள் மனித சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. ரஷ்யா நாட்டில் உள்ள காமலேயா நிறுவனம் தடுப்பூசி கண்டுபிடித்து, அதனை மனிதர்களுக்கு பரிசோதனை செய்து நிறைவு செய்துவிட்டதாகவும் அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய சுகாதார அமைச்சர் அண்மையில் தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர் கூறுகையில், ‘ சில தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் தடுப்பொசிகள் கண்டுபிடித்து விட்டதாக கூறிவருகின்றனர். ஒரு தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கும் அது வேலை செய்வதை உறுதி செய்வதற்கும் நிறைய நடைமுறைகள் உள்ளன. தடுப்பூசிக்கு என நிறுவப்பட்ட ஒழுங்கு நடைமுறைகள் வழிகாட்டுதல்களுக்கு அந்த தடுப்பூசிகள் உட்படுத்தபட வேண்டும். அவை மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் பல்வேறு சோதனைகளை கடந்து செல்லவது கட்டாயம். ஒரு தடுப்பூசியின் பாதுகாப்பான வளர்ச்சியை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் வழிகாட்டுதல் மற்றும் ஒழுங்கு முறைகள் உள்ளன அதனை ரஷ்யா நிச்சயமாக பின்பற்ற வேண்டும். ‘ என அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்