அனைவரும் ஆபத்தில் இருக்கிறோம்.! நம்மை நாமேதான் பாதுகாக்க வேண்டும்.! WHO எச்சரிக்கை.!

Default Image

‘ தினமும் கொரோனா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டு வருவதை என்பதை நாம் நினைவில் கொண்டு, நம் ஒவ்வொருவரையும் நமே தான் பாதுகாத்து கொள்ள வேண்டும் ‘ – WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம். இருக்கிறது. இதனை தடுக்கு உலக நாடுகள் போராடி வருகின்றன. இதுவரையில், 1,55,17,229 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6.3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இருந்தாலும், 94 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

கொரோனா தடுப்பு மருந்துகள் :

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தடுக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா வைரஸ் தடுப்பூசி  தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு, கண்டுபிடித்த தகடுப்பூசி பாதுகாப்பானதாக இருப்பதாகவும், வலுவான நோயெதிர்ப்பு சக்தியை தருவதாகவும்,  விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.  அந்த தடுப்பு மருந்துகான இறுதி சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

அதே போல, ரஷ்யா தயாரித்து வரும் தடுப்பூசி ஆகஸ்டில் மூன்றாம் கட்ட சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் டெல்லி  எய்ம்ஸில் மனித சோதனை நடைபெற்று வருகிறது.

இது போல் பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பூசி கண்டறிவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனால், உலக மக்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

எச்சரிக்கும் WHO :

அண்மையில், டிவிட்டரில் WHO வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாக கீழ்கண்ட கருத்தை பதிவிட்டுள்ளது.

அதில், ” உலகில் பெரும்பாலான மக்கள் இன்னும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கோவிட்-19 இன்னும் பரவிவரும் நிலையில், நம் அனைவருக்கும் ஆபத்து உள்ளது.

கொரோனா பாதிப்புகள் குறைந்தால், நீங்கள் உங்கள் பாதுகாப்பை தளர்த்தி கொள்வது பேராபத்தாகும்” எனவும்,

” மற்ற யாரேனும், உங்களை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என எதிர்பார்க்க கூடாது. நம் ஒவ்வொருவரையும் பாத்துக்கவேண்டியது நமது கையில்தான் உள்ளது. ” என WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்ததாக WHO அமைப்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்