உலக சுகாதார நிறுவனம் பாட்டில் குடிநீரில் பிளாஸ்டிக் துகள்கள் குறித்து ஆய்வு!
உலக சுகாதார நிறுவனம் பாட்டில்களில் விற்கப்படும் குடிநீரில் பிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டது குறித்து ஆய்வு நடத்த உள்ளது. இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 9 நாடுகளில், முன்னணி நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்களை அமெரிக்காவின் ஓர்ப் மீடியா (Orb Media) என்ற அமைப்பு சோதனை நடத்தியது. 259 குடிநீர் பாட்டில்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அதில், ஒவ்வொரு லிட்டர் குடிநீரிலும் 325 மிக நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது தெரிய வந்தது. இந்த ஆய்வு முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பான ஆய்வில் உலக சுகாதார நிறுவனம் இறங்கியுள்ளது. அதே நேரத்தில், பாட்டில் குடிநீரால் இதுவரை பாதிப்பு ஏற்பட்டதாக, எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.