சீனாவின் வூஹானிலிருந்து தான் கொரோனா பரவியது என்பதை மறைக்க WHO பெரும் பங்காற்றுகிறது – சீன வைராலஜிஸ்ட்!
சீனாவின் வூஹானிலிருந்து தான் கொரோனா பரவியது என்பதை மறைக்க WHO பெரும் பங்காற்றுகிறது என சீன வைராலஜிஸ்ட் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும் என்பதாக பகிரங்கமாக சீனாவில் உள்ள லி மெங் யான் எனும் வைராலஜிஸ்ட் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஒரு நேர்காணலில் பேசியுள்ள அவர் சீன அரசாங்கம் கொரோனாவை பரப்புவதை பற்றி அறிந்திருந்தும் அதை மூடி மறைப்பது உலக சுகாதார அமைப்பு தான் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கொரோனா தொற்றின் தொடக்கமே வூஹான் மாகாணத்தில் உள்ள ஒரு மார்க்கெட் தான் எனவும் இது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சூழ்சி எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் சீன அரசாங்கம் தற்போது தனது பெயருக்கு ஊடகங்கள் மூலமாக களங்கம் விளைவிப்பதாகவும், அவரது குடும்பத்தை அச்சுறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.