பொன்னியின் செல்வன் நடிகர்களின் கதாபாத்திரங்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது. அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு 70% விகிதம் முடிவைத்துள்ள நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து படத்திற்கான படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இதில் பொன்னியின் செல்வன் பாகம் 1 அடுத்தாண்டு வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த பட்டியல் தற்போது கிடைத்துள்ளது. இதோ அந்த பட்டியல்
வந்தியத் தேவன் – கார்த்தி
ஆதித்ய கரிகாலன் – விக்ரம்
அருள்மொழி வர்மன் – ஜெயம் ரவி
சுந்தர சோழர் – பிரகாஷ்ராஜ்
நந்தினி – ஐஸ்வர்யா ராய்
பூங்குழலி – ஐஸ்வர்யா லட்சுமி
குந்தவை – த்ரிஷா
சின்ன பழுவேட்டரையர் – பார்த்திபன்
பெரிய பழுவேட்டரையர் – சரத்குமார்
வானதி – ஷோபிதா
கடம்பூர் சம்புவரையர் – நிழல்கள் ரவி
மலையமான் – லால்
ஆழ்வார்க்கடியான் நம்பி – ஜெயராம்
அநிருத்த பிரம்மராயர் – பிரபு
சோமன் சாம்பவன் – ரியாஸ் கான்
ரவிதாசன் – கிஷோர்
சேந்தன் அமுதன் – அஸ்வின்
கந்தன் மாறன் – விக்ரம் பிரபு
மதுராந்தகன் – அர்ஜுன் சிதம்பரம்
பார்த்திபேந்திர பல்லவன் – ரஹ்மான்
குடந்தை ஜோதிடர் – மோகன்ராம்
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…