96 மலையாள பட ரீமேக்கில் விஜய் சேதுபதிக்கு ஜோடி யார் தெரியுமா?
96 மலையாள பட ரீமேக்கில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்தியா மேனன் அவர்கள் நடிக்கிறார்கள்.
இயக்குனர் பிரேம் குமார் அவர்கள் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்து வெளியாகிய தமிழ் திரைப்படம் 96. இந்த படம் தமிழில் பெரும் வரவேற்பு பெற்றது. நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய காதல் திரைப்படம் நீண்ட நாட்களுக்கு பின் 96 என்றுதான் கூறவேண்டும். இந்த படத்தின் வெற்றியை அடுத்து எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்ய வேண்டும் என இந்த படத்தை தயாரித்தவர்கள் விரும்பியதை அடுத்து தெலுங்கில் சமந்தாவை வைத்து ஜானு எனும் பெயரில்இந்த படம் வெளியிடப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தராமல் அந்த படம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தற்போது மலையாளத்தில் 96 படம் எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த படத்தில் ராம் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை நித்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.