ஷங்கர்-ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக தென் கொரிய நடிகை சுஸி பே என்பவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமலின் ‘இந்தியன் 2’ படத்தினை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தின் பணிகள் தடை செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை ஷங்கர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.ஷங்கர் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ராம் சரண் நடிக்க உள்ளதாகவும் , ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.தமிழ் , தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் பிற மொழியை சார்ந்த மற்றொரு டாப் ஹீரோவும் நடிக்க உள்ளதாகவும் , அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது ஷங்கர்-ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஹீரோயின் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக ரஷ்மிகா மந்தானா நடிக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்து .ஆனால் அந்த தகவல் இன்னும் உறுதியாகவில்லை.இந்த நிலையில் தற்போது படத்தின் ஹீரோயின் குறித்த மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஷங்கர்-ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக தென் கொரிய நடிகை சுஸி பே என்பவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகை சுஸி பேயிடம் ஷங்கரின் ’இந்தியன் 2’ படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…