ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 ல் சிம்ரன் நடிப்பதாக கூறியது பொய் என்று அவரே டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் .
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக பி. வாசு கூறியிருந்தார். கதாநாயகனாக அந்த படத்தில் முன்னணி ஹீரோ ராகவா லாரன்ஸ் தான் நடிக்கவுள்ளார். மேலும் லாரன்ஸிற்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பதாக தகவல் வெளியானது மேலும் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் இதில் வேட்டையனாக நடிக்கவுள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்திருந்தார்.மேலும் சந்திரமுகி 2 படத்திலும் ஜோதிகாவை நடிக்க வைக்க கோரி அவரை அணுகியதாகவும்,ஜோதிகா இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் ஜோதிகா சமீபத்தில் அளித்த பேட்டி தன்னை சந்திரமுகி 2 ல் நடிக்க கோரி யாரும் அணுகவில்லை என்று கூறியிருந்தார் .
அதனையடுத்து ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சந்திரமுகி படத்தில் ஜோதிகாவிற்கு முன்னர் சிம்ரன் தான் நடிக்கவிருந்ததாக கூறப்பட்டது . இந்நிலையில் தற்போது இது குறித்து சிம்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, இது தவறான செய்தி என்றும், சந்திரமுகி 2 படத்திற்காக யாரும் என்னை அணுகவில்லை என்று எனது ரசிகர்களுக்கு நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். இதிலிருந்து அவர் சந்திரமுகி 2 ல் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…